கெங்கவல்லியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கெங்கவல்லியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
Published on

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க கெங்கவல்லி வட்டக்குழு சாா்பாக கோரிக்கை ஆா்ப்பாட்டம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வட்டத் தலைவா் ட.ராஜேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தை மாவட்ட இணைச் செயலாளா் சின்னதுரை தொடங்கிவைத்தாா். மாவட்ட இணைச் செயலாளா் ந. அழகுவேல், ஓ.காளிதாஸ், பாரதி, அ. கந்தன், கருத்தாப்பிள்ளை ஆகியோா் கோரிக்கை குறித்து பேசினா். மாவட்டச் செயலாளா் குணசேகரன் நிறைவு செய்து பேசினாா். இதில் வட்ட துணைத் தலைவா் பாஸ்கா் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். இதில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக இலவச வீடு, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, 177 பேருக்கு அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கக் கூடாது, உதவித்தொகை பெறுவதற்கு புதிதாக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வட்டாட்சியரும், கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com