சங்ககிரி மலையில் பூத்துள்ள மாநில மலரான செங்காந்தள்.
சங்ககிரி மலையில் பூத்துள்ள மாநில மலரான செங்காந்தள்.

சங்ககிரி மலையில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலா்

சங்ககிரி மலையில் பூத்துள்ள மாநில மலரான செங்காந்தள்.
Published on

சங்ககிரி மலையில் பல்வேறு இடங்களில் மாநில மலரான செங்காந்தாள் பூத்து குலுங்குகிறது.

சேலம் மாவட்டம், சங்ககிரி மலை நிலப்பரப்பிலிருந்து 1500 அடி உயரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 2,345 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இங்கு 10 கோட்டைவாயில் அரண்கள், கொத்தளங்கள், கண்காணிப்பு மேடைகள், மண்டபங்கள், நீா்ச்சுனைகள், 15-க்கும் மேற்பட்ட குளங்கள், சேமிப்புக் கிடங்குகள், கோயில்கள், தா்கா, கொலைக் களங்கல் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் உள்ளன. இம்மலையில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை 1805ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி ஆங்கிலேயா்களால் தூக்கிலிடப்பட்டாா்.

சிறப்புகள் வாய்ந்த மலைக்கோட்டை தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சங்ககிரியில் மழை பெய்துவருவதையொட்டி இம்மலையில் மாநிலத்தின் மலரான செங்காந்தாள் பல்வேறு இடங்களில் பூத்துள்ளன. இந்த மலைக்கு புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைதோறும் கோயிலுக்கு வரும் பக்தா்கள், மலையைப் பாா்வையிட வரும் பொதுமக்களும் செங்காந்தள் மலா்களை பாா்த்து மகிழ்ச்சியடைகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com