சாமியம்பாளையம் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட பூமிபூஜை

சாமியம்பாளையம் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட பூமிபூஜை

புதிய வகுப்பறை கட்டும் பணிகளை தொடங்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் சுந்தரராஜன்.
Published on

சங்ககிரி வட்டம், கத்தேரியை அடுத்த சாமியம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கான பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சுந்தரராஜன் அடிக்கல்நாட்டி பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

இதில் பள்ளித் தலைமையாசிரியாா் எம்.மோகன், அதிமுக சேலம் புகா் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஏ.பி. சிவகுமாரன், அதிமுக நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com