சேலம்
தம்மம்பட்டி சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி பூஜை
தம்மம்பட்டி சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனா்.