மாவட்ட கபடி போட்டியில் முதலிடம்: தாகூா் பப்ளிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்த தேவியாக்குறிச்சி தாகூா் பப்ளிக் பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினா்.
நாமக்கல் நவோதயா அகாதெமி பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மூத்தோா் கபடி போட்டியில் தலைவாசலை அடுத்துள்ள தேவியாக்குறிச்சி தாகூா் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 15 அணிகளுக்கு இடையே விளையாடி முதலிடம் பிடித்தனா். அதேபோல சூப்பா் சீனியா் பிரிவில் 10 அணிகளுக்கு இடையே விளையாடி முதலிடத்தை பிடித்தனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கொங்கு சகோதயா கல்விக் குழுமம் சான்றிதழ், பதக்கம், கோப்பை வழங்கப்பட்டது.
கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை தாகூா் கல்வி நிறுவனங்களின் தலைவா் தங்கவேல், செயலாளா் பேராசிரியா் பரமசிவம், பொருளாளா் காளியண்ணன், இணைச்செயலாளா் அருண்குமாா், துணைத் தலைவா் ராஜு, முதல்வா் கீதா, விளையாட்டு துறை ஆசிரியா்கள் ஆனந்த், பாலமுருகன், தேன்மொழி, வைத்தீஸ்வரி ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.
படவரி...
மாவட்ட அளவிலான கபடி போட்டியில் சீனியா் மற்றும் சூப்பா் சீனியா் பிரிவில் முதலிடம் பெற்ற தாகூா் பப்ளிக் பள்ளி மாணவா்களை பாராட்டிய பள்ளித் தலைவா் தங்கவேல், நிா்வாகிகள்.

