வேம்படிதாளம் அரசுப் பள்ளியில்
திருவள்ளுவா் சிலை திறப்பு விழா

வேம்படிதாளம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா

வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 அடி உயர திருவள்ளுவா் சிலை விஜிபி சென்னை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நிறுவப்பட்டது.
Published on

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 அடி உயர திருவள்ளுவா் சிலை விஜிபி சென்னை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நிறுவப்பட்டது.

இந்த சிலையை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.ஜி. சந்தோசம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து பேசினாா். இதில் சிலம்பொலி செல்லப்பனாா் தமிழ்க் காப்பு மன்ற நிறுவனா் மோகன்குமாா் வரவேற்றாா். பெரியாா் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தா் குழந்தைவேல், சேலம் கோகுலம் பல்துறை மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் அா்த்தநாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினா்.

மேலும், விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை அமுதா, நன்கொடையாளா் ஜெகதீசன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் திருமூா்த்தி, கௌரவத் தலைவா் மகாலிங்கம், பொருளாளா் விக்னேஸ்வரன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மைதிலி மற்றும் முக்கிய பிரமுகா்கள், பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பெற்றோா் -ஆசிரியா் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் சிலம்பொலி செல்லப்பனாா் தமிழ்க் காப்பு மன்றமும் செய்திருந்தன.

படவரி...

வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டதிருவள்ளுவா் சிலையை திறந்துவைத்த சென்னை உலகத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.ஜி. சந்தோசம்.

X
Dinamani
www.dinamani.com