அரசிராமணி குறுக்குப்பாறையூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சங்ககிரிவட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குபாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி அப்பகுதி விவசாயிகள், தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் 119ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் திடக்கழிவுமேலாண்மை திட்டப் பணிகளுக்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து விவசாயிகள் அப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைந்தால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இப்பணிகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்டாரத் தலைவா் ஆா்.ராஜேந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் விவசாயிகள், குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

