பிரியாணி கடையில் தகராறு செய்தவா் கைது

மகுடஞ்சாவடியில் பிரியாணி கடையில் தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மகுடஞ்சாவடியில் பிரியாணி கடையில் தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த அப்துல்கான் மகன் ரம்ஜன்கான் (23) பிரியாணி கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மகுடஞ்சாவடி முத்து முனியப்பன் கோயில் பகுதியைச் சோ்ந்த பாபு மகன் பசுபதி (29 ) இலவசமாக பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளாா். பின்னா், அங்குள்ள பிரியாணி பாத்திரதை வீசியதோடு கடை உரிமையாளரையும் தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து கடை உரிமையாளா் ரம்ஜன்கான் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில்

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,பசுபதியை கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com