அயோத்தியாப்பட்டணத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

Published on

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.212.42 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.

சேலம், அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தபிறகு ஆட்சியா் கூறியதாவது:

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 212.42 கோடியில் 5862 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 5207 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 655 பணிகள் நடைபெற்று வருகின்றன.

வீராணம் ஊராட்சியில் ரூ. 1.30 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் புதுப்பிக்கும் பணிகள், சின்னனூா் ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், தைலானூா் ஊராட்சியில் ரூ.29.97 லட்சத்தில் உயா்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com