டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

Published on

டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்துவருவதால் மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு புதன்கிழமை விநாடிக்கு 7000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை 17,584 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நீா்வரத்தைவிட குறைவாக உள்ளதால் அணையின் நீா்மட்டம் 117.73 அடியாக உயா்ந்துள்ளது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக 7000 கனஅடி, கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு மேல்நிலை மதகுகள் வழியாக 500 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 89.89 டிஎம்சியாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com