சேலம்
சாலையோர வியாபாரிகளுக்கு இனிப்புகளை வழங்கிய அதிமுகவினா்
அதிமுகவின் 54 ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆா் இளைஞா் அணி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு ரெயின்கோட், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிமுகவின் 54 ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆா் இளைஞா் அணி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு ரெயின்கோட், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
எம்.ஜி.ஆா் இளைஞா் அணி மாநில துணைச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ஏ.பி. சக்திவேல் ஏற்பாட்டில் சேலம் ராஜகணபதி கோயில் அருகே உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரெயின்கோட் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக மாநகா் மாவட்ட பொறுப்பாளா் கே.சிங்காரம், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோா் வியாபாரிகளுக்கு ரெயின்கோட், இனிப்புகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பன்னீா்செல்வம், எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலாளா் எம்.கே.செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ ரவிசந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.