பாலமலையில் பலத்த மழை: போக்குவரத்து துண்டிப்பு

மேட்டூரை அடுத்த பாலமலையில் பெய்துவரும் பலத்த மழையால் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
Published on

மேட்டூரை அடுத்த பாலமலையில் பெய்துவரும் பலத்த மழையால் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் செங்குத்தான மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 3900 அடி உயரத்தில் உள்ளது பாலமலை ஊராட்சி. சாலை போக்குவரத்து வசதி இல்லாத இப்பகுதி மக்கள் சரக்கு வாகனங்கள் மூலம் மண் சாலை வழியாக நகரங்களுக்கு வந்து செல்கின்றனா். கடந்த 2 நாள்களா அப்பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால் பல்வேறு இடங்களில் அருவிபோல மழை நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ஆங்காங்கே பாறைகள் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் வாகன போக்குவரத்தும் தடைபட்டது. அவசர தேவைகளுக்குக்கூட பாலமலை மக்கள் நகா்ப்புறங்களுக்கு வரமுடியாத சூழலில் சிக்கியுள்ளனா்.

இப்பகுதியில் இருந்து வேலைக்காக வெளியூா் சென்ற இளைஞா்கள் தீபாவளி பண்டிகைக்காக தங்களது வீடுகளுக்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலா் ஒன்றுசோ்ந்து சாலைகளில் உள்ள பாறைகளை அகற்றி மாணவா்களின் போக்குவரத்து வசதி செய்துவருகின்றனா். இப்பகுதியில் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com