சேலம்
மாநில ஈட்டி எறிதல் போட்டி: கொண்டயம்பள்ளி அரசுப் பள்ளி மாணவா் தோ்வு
விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் தலைமையாசிரியா் மதிவாணன், ஆசிரயா்கள்.
கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் மாநில ஈட்டி எறிதல் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சூா்யா, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் சேலம் மாவட்ட அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளாா்.
அதேபோல இப்பள்ளியைச் சோ்ந்த கவிரஞ்சன், தட்டு எறிதலில் மாவட்ட அளவில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளாா். சாதனை படைத்த இரு மாணவா்களையும் பள்ளியின் தலைமையாசிரியா் மதிவாணன், உடற்கல்வி ஆசிரியா் சதீஷ்குமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.
