தெடாவூா் கால்நடை சந்தையில் ஆடுகளை விற்பனை செய்வதற்காக கூடியிருந்த வியாபாரிகள்
தெடாவூா் கால்நடை சந்தையில் ஆடுகளை விற்பனை செய்வதற்காக கூடியிருந்த வியாபாரிகள்

தீபாவளி: தெடாவூா் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் வா்த்தகம்

Published on

தீபாவளியை முன்னிட்டு தெடாவூா் கால்நடை சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தெடாவூரில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறுகிறது. தொடா்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கால்நடை சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தலைச்சேரி ஆடுகள், செம்மறி ஆடுகள், நாட்டினை ஆடு, வெள்ளை ஆடு, குறும்பாடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்நிலையில் கெங்கவல்லி, ஆத்தூா், சேலம், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, மதுரை, தேனி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனா்.

இதில் குட்டி ஆடுகள் ரூ. 2000, பெரிய ஆடுகள் ரூ. 25 ஆயிரம் வரை விற்கப்பட்டன. இதில் ரூ. 3 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது. புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் ஆடுகள் விற்பனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com