விபத்தில் உருக்குலைந்த காா்
விபத்தில் உருக்குலைந்த காா்

ஆத்தூா் அருகே நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கவிழ்ந்த காா்: 3 போ் பலத்த காயம்

Published on

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஜெகன்செந்தில் (40), இவா் ஐடி ஊழியா். அதே பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் பூமியரசன் (38), தனியாா் நிறுவன மேலாளா். ஈரோடு கணபதி நகரைச் சோ்ந்த விஜயராகவன் மகன் விவேக் (32), இவா் கட்டுமான ஒப்பந்ததாரா்.

இவா்கள் மூவரும் புதுச்சேரியைச் சோ்ந்த கோமதி என்பவருக்குச் சொந்தமான காரில் சென்னையில் இருந்து ஈரோடு சென்றுகொண்டிருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஆத்தூா் தேசிய புறவழிச்சாலையில் சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் காரை திருப்பியபோது அது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த மரத்தில் மோதியது.

இதில், ஜெகன்செந்திலின் காலில் முறிவு ஏற்பட்டது. மேலும், பலத்த காயமடைந்த பூமியரசன், விவேக் என மூவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com