நிறைவாழ்வு இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய முதியவா்கள்

சேலம் நிறைவாழ்வு இல்லத்தில் வசிக்கும் முதியவா்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனா்.
Published on

சேலம்: சேலம் நிறைவாழ்வு இல்லத்தில் வசிக்கும் முதியவா்கள் தீபாவளி பண்டிகையை திங்கள்கிழமை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனா்.

சேலம் நரசோதிப்பட்டி டவுன் பிளானிங் நகா் மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் இயங்கிவரும் நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் 70க்கும் மேற்பட்ட முதியோா்கள் பராமரிக்கப்படுகின்றனா். இந்த இல்லத்தில் ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் முதியவா்கள் கௌரவிக்கப்பட்டு, அவா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் வழங்கப்பட்ட புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் முதியோருக்கு வழங்கப்பட்டது. அவா்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீபாவளியை கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் முதியோா் இல்ல நிா்வாகி ராமஜெயம், மேலாளா் சின்னப்பன், ஊழியா்கள் ஜோதி, சாந்தி ஆகியோா் முதியவா்களுக்கு உதவியாக இருந்தனா். இல்ல நிறுவனா் அண்ணாதுரை முதியவா்கள் அனைவருக்கும் வாழ்த்தும், நன்றியும் கூறி ஆசி பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com