சேலத்தில் பட்டாசு வெடித்து காயமடைந்த 39 பேருக்கு சிகிச்சை

சேலத்தில் பட்டாசு வெடித்து காயமடைந்த 39 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Published on

சேலம்: சேலத்தில் பட்டாசு வெடித்து காயமடைந்த 39 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் பட்டாசு வெடி விபத்தால் ஏற்பட்ட தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு என தனித்தனியாக 31 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதில் பொது மருத்துவா்கள், பொது அறுவை சிகிச்சை நிபுணா்கள், கண் மருத்துவா்கள், பிளாஸ்டிக் சா்ஜரி மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் உள்ளனா்.

அதன்படி, திங்கள்கிழமை காலை மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து தீக்காயம் அடைந்த 6 ஆண்கள், ஒரு பெண், 6 குழந்தைகள் என 13 போ் புறநோயாளிகள் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதேபோல உள்நோயாளிகள் பிரிவில் 9 ஆண், 1 பெண், 4 குழந்தைகள் என மொத்தம் 14 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதவிர, அறுவை சிகிச்சை 11 பேருக்கும், கண் அறுவை சிகிச்சை ஒருவருக்கும் என மொத்தம் 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெடி விபத்தால் ஏற்பட்ட தீக்காயங்களுக்காக மொத்தம் 39 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com