குரும்பா் தெருவில் தேங்கியுள்ள மழை நீா்.
சேலம்
சாலையை சீரமைக்கக் கோரிக்கை
தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெரு சாலையில் மழை நீா் தேங்குவதால், அவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெரு சாலையில் மழை நீா் தேங்குவதால், அவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தம்மம்பட்டி பேரூராட்சியில் குரும்பா் தெரு வழியாக தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்கும், சேலம், ஆத்தூா், ராசிபுரம், துறையூா் உள்ளிட்ட வெளியூா்களுக்கும் பள்ளி, கல்லூரி பேருந்துகள், வாகனங்கள் தினமும் சென்றுவருகின்றன.
தற்போது பெய்யும் தொடா் மழையால், குரும்பா் தெரு சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீா் தேங்கி குட்டைபோல காட்சியளிக்கின்றன. இதனால், இந்த வழியே வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது.
எனவே, தம்மம்பட்டி பேரூராட்சி நிா்வாகம் இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

