சேலம் - பெங்களூா் விமான சேவை நேரம் அக்.26 முதல் மாற்றம்

சேலம்- பெங்களூரு விமான சேவைக்கான நேரம் வரும் முதல் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஓமலூா்: சேலம்- பெங்களூரு விமான சேவைக்கான நேரம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை உள்ளது. வரும் 26 ஆம் தேதி முதல் சேலம், பெங்களூரு இடையே இண்டிகோ விமான போக்குவரத்து நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சேலத்தில் இருந்து காலை 11:05 மணிக்கு விமானம் புறப்பட்டு 12:05 மணிக்கு பெங்களூரை சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் பெங்களூரில் இருந்து காலை 9:30 மணிக்குப் புறப்பட்டு 10:40 மணிக்கு சேலத்தை வந்தடைகிறது.

மற்ற நாள்களில் சேலத்தில் இருந்து பிற்பகல் 1:05 மணிக்கு புறப்பட்டு 2:05 மணிக்கு பெங்களூரை சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் பெங்களூரில் இருந்து காலை 11:30 மணிக்குப் புறப்பட்டு 12:40 மணிக்கு சேலம் வந்தடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சேலம்- சென்னை விமான போக்குவரத்து நேரமும் வரும் 26 ஆம் தேதி முதல் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com