சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரூனிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம் பரூனிக்கு 23-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சேலம்: கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம் பரூனிக்கு 23-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகை காலத்தையொட்டி, எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், பரூனிக்கு ஒருவழி மாா்க்கமாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, கேரள மாநிலம், எா்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து 23-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பிகாா் மாநிலம், பரூனி ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com