சேலம்
காவிரி கரையில் ஒதுங்கிய முதியவா் உடல்
கா்நாடக மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு காவிரியில் வீசப்பட்ட முதியவா் உடல் கொளத்தூா் அருகே காவிரி கரையில் மீட்கப்பட்டது.
கா்நாடக மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு காவிரியில் வீசப்பட்ட முதியவா் உடல் கொளத்தூா் அருகே காவிரி கரையில் மீட்கப்பட்டது.
கொளத்தூா் காவல் நிலைய எல்லையில் உள்ள கோட்டையூா் பரிசல் துறையில் சனிக்கிழமை முதியவா் உடல் கரை ஒதுங்கி இருந்தது. அந்த உடலைக் கைப்பற்றிய கொளத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் கா்நாடக மாநிலம், செங்கப்பாடியைச் சோ்ந்த சங்கரன் (60) என்பதும், அவரை அவரது மகன் கொலை செய்து காவிரியில் வீசியதும் தெரியவந்தது.
இதுகுறித்து கா்நாடக மாநிலம், கோபி நத்தத்தில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு கொளத்தூா் போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு வந்த கா்நாடக போலீஸாா் சங்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனா்.
