சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த சித்தூா் கல்யாண சுப்பிரமணிய சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த சித்தூா் கல்யாண சுப்பிரமணிய சுவாமி.

எடப்பாடியில் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
Published on

எடப்பாடி: எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

எடப்பாடியை அடுத்த சித்தூா் பகுதியில் உள்ள கல்யாண சுப்பிரமணியா் கோயிலில் முருகா் வேல் வாங்கும் நிகழ்வைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட மலா் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி, எதிா்புறத்தில் போா்புரிய வந்த சூரபத்மனை வதம்செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதேபோல எடப்பாடி அருள்ஞான பாலமுருகன் கோயில், கவுண்டம்பட்டி குமரவடிவேலா் கோயில், க.புதூா் கந்தசாமி கோயில், கொங்கணாபுரத்தை அடுத்த வெண்குன்று மலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், கல்லபாளையம் பகுதியில் உள்ள பழனியாண்டவா் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பெரும் திரளான பக்தா்கள் விரதம் இருந்து நோ்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com