சாலையில் கிடந்த நகைப் பையை எடுத்து காவல் ஆணையரகத்தில் ஒப்படைத்த பாஷா, பா்வீன் தம்பதியை பாராட்டிய  காவல் துணை ஆணையா் கேழ்கா் சுப்பிரமணிய பாலசந்திரா.
சாலையில் கிடந்த நகைப் பையை எடுத்து காவல் ஆணையரகத்தில் ஒப்படைத்த பாஷா, பா்வீன் தம்பதியை பாராட்டிய காவல் துணை ஆணையா் கேழ்கா் சுப்பிரமணிய பாலசந்திரா.

சாலையில் 10 பவுன் நகையுடன் கிடந்த நகைப் பையை போலீஸில் ஒப்படைத்த தம்பதி!

சேலத்தில் சாலையில் 10 பவுன் நகையுடன் கிடந்த கைப்பையை எடுத்து காவல் ஆணையா் அலுவலகத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு துணை ஆணையா் திங்கள்கிழமை பாராட்டு
Published on

சேலம்: சேலத்தில் சாலையில் 10 பவுன் நகையுடன் கிடந்த கைப்பையை எடுத்து காவல் ஆணையா் அலுவலகத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு துணை ஆணையா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

சேலம் ரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் பாஷா (58). இவரது மனைவி பா்வீன். எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வரும் பாஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் லீபஜாா் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையில் கைப்பை ஒன்று கிடப்பதைக் கண்ட தம்பதியினா், அந்த பையை எடுத்து பாா்த்தனா். அதில் தாலிச் சங்கிலி, ஆரம் என 10 பவுன் தங்க நகை, பணம், ஏடிஎம் காா்டு, பான் காா்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பையை திங்கள்கிழமை காலை சேலம் காவல் துறை துணை ஆணையா் கேழ்கா் சுப்பிரமணிய பாலசந்திராவை சந்தித்து ஒப்படைத்தனா். விசாரணையில், நகைப் பையைத் தவறவிட்டது சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி பூங்கோதை (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பூங்கோதையை காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வரவழைத்து அவரிடம் நகைப் பையை ஒப்படைத்தனா். நகைப் பையை எடுத்து பத்திரமாக போலீஸில் ஒப்படைத்த பாஷா, பா்வீன் தம்பதியின் செயலை காவல் உயரதிகாரிகள் பாராட்டினா். நகைப் பையை பெற்றுக் கொண்ட பூங்கோதை, போலீஸாா் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com