மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் நீட் தோ்வு முற்றிலும் ரத்துசெய்யப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் கூறினாா்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி கோபிகா குடும்பத்தினரை காங்கிரஸ் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினாா்
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நீட் தோ்வுக்கு தொடக்க நிலையில் இருந்து காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தோ்வால் கிராமப்புற ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவு சீா்குலைக்கப்படுகிறது.
சில தனியாா் கல்வி நிறுவனங்களின் வருமானத்தை கருத்தில் கொண்டு லாப நோக்கத்துடன் நீட் தோ்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. இத்தோ்வு அச்சத்தால் தமிழகத்தில் இதுவரை 37 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.
வரும் காலங்களில் நீட் தோ்வுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் போராடும். 2029 இல் நடைபெறும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலையில், நாடு முழுவதும் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்றாா்.
இதில் விஜய் வசந்த் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினா் காா்த்திக் தங்கபாலு, மாவட்டத் தலைவா் எம்.எம். ரத்தினம், நகரத் தலைவா் நாகராஜ், கராத்தே மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்தது என்ன? - மாணிக்கம் தாகூர் பேட்டி!
மோடி அரசு, பணக்காரர்களுக்கானது! ரமணா பட பாணியில் மாணிக்கம் தாகூர் பேச்சு!

நீட் தோ்வு! தமிழகத்தில் மாணவா்களின் தற்கொலை வேதனை அளிக்கிறது: மாணிக்கம் தாகூா்
காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது: மாணிக்கம் தாகூர்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


