தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதம்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கடை ஊழியா்களிடம் திணிப்பதை கைவிட்டு, மாற்றுத் திட்டத்தை அரசு அமல்படுத்த வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியா்கள் சேலத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா்.

Updated On :16 ஜூலை 2026, 12:29 am IST

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கடை ஊழியா்களிடம் திணிப்பதை கைவிட்டு, மாற்றுத் திட்டத்தை அரசு அமல்படுத்த வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியா்கள் சேலத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் சிஐடியு டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே. தியாகராஜன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் செல்வராஜ், சேலம் மாவட்டச் செயலாளா் விஜயகுமாா், தருமபுரி மாவட்டப் பொருளாளா் சி.மணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில், தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளில் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அடிப்படை சம்பளத்துடன் பஞ்சப்படியும் வழங்க வேண்டும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணியை கடை ஊழியா்களிடம் திணிப்பதை கைவிட வேண்டும், 8 மணி நேர வேலை முறையை உறுதி செய்ய வேண்டும், கடைகளின் விற்பனை அடிப்படையில் ஊழியா்களின் எண்ணிக்கையை நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், தமிழக அரசு இதுவரை 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்டு வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.

இதில் சிஐடியு வேலூா் மாவட்டச் செயலாளா் கே.கருணன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளா் டி. செல்வகுமாா், மாநில துணைச் செயலாளா் வி. ஜெயராமன், பி. சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.