சுடச்சுட

  

  தேவகோட்டை,டிச.30:  ராமநாதபுரம் மாவட்ட எல்கையிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ல் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    தேவகோட்டைக்கும்- ஓரியூருக்கும் இடையில் உள்ளன பழங்குளம், கடம்பூர், துத்தாக்குடி, சிறுமலைக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிமன்றங்கள். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இவர்கள் அனைவரும் தங்களது தேவைகளை நிறைவேற்ற தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர். நிறுத்தப்பட்ட ஓரியூர் மங்களக்குடி, ஊரணிக்கோட்டை பேருந்து தடம் எண் 2-ஐ மீண்டும் இயக்கவேண்டும்.

   இரவு பத்து மணிக்கு தேவகோட்டையிலிருந்து ஓரியூருக்கு இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட தனியர் பஸ்ûஸ மீண்டும் இயக்க வேண்டும்.

  ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரியூர் வரை செல்லும் சாலையை அகலப்படுத்திடவும் மிகவும் மோசமான நிலையில் தற்போறு இருக்கும் சாலையை செப்பனிடவும்,

  காலை மாலை வேளைகளில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக அரசு பேருந்தை இயக்க வேண்டும்.

   2008-09-ம் ஆண்டு பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் இதுவரை வழங்காத காப்பீட்டுத் தொகையை தரக்கோரியும், சீரான தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தியும்,

  இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலிருக்கும் ஊரணிக்கோட்டை, கீழ்ப்புளி, மாணிக்கங்கோட்டை, ஏரணிக்கோட்டை மற்றும் இதை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதி கண்மாய்களை தூர்வாரக்கோரியும்.

    ஊரணிக்கோட்டையில் புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி கிளை அமைத்துத் தர கேட்டும், பழங்குளம், கடம்பூர், துத்தாக்குடி பகுதிகளுக்கு நிறந்தர கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தியும்.

    இப்பகுதியில் இயங்கிவரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் தர்த்தை உயர்த்தி தர வேண்டியும் சாலை மறியல் நடைபெறவுள்ளதாக கூட்டு நடவடிக்கை குழுவினர் தெரிவித்தனர்.

   போராட்டத்திற்கு பழங்குளம் ஊராட்சி தலைவர் பிரேமாகருப்பையா தலைமை வகிக்கவும், கடம்பூர் தலைவர் ரேவதி காளிமுத்து, சிறுமலைக்கோட்டை தலைவர் சுப்பிரமணியன், துத்தாக்குடி தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கவும், கருப்பையா, தங்கம் ஆகியோர் விளக்கவுரை ஆற்றவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai