சுடச்சுட

  

  திருவாடானை, டிச.30:  திருவாடானை தாலுகா தொண்டியில் மீண்டும் துறைமுகம் அமையுமா என்பதை அறிய பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.

    ராமநாதரபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியில் சங்க இலக்கிய காலம், கோவலன் கண்ணகி வரலாற்றுக் காலத்தில் இந்த துறைமுகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

   ஒரு காலத்தில் மிகப்பெரிய வர்த்தகத் துறைமுகமாக விளங்கிய தொண்டி துறைமுகம் திருவாடானை தாலுகாவின் கடலோர நகரமாக விளங்கியுள்ளது. இலக்கியத்தில் சிறப்பு பெற்ற தொண்டி துறைமுகம் ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்துள்ளது.

   பர்மா, இலங்கை தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து,  தேவகோட்டை,காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, செட்டிநாடு, பள்ளத்தூர் போன்ற ஊர்களுக்கு கப்பல் மூலம் தேக்கு மரங்கள் கொண்டு வந்ததற்கு இன்றும் சான்றுகள் உள்ளன.

    துறைமுகம் நாளடைவில் இயற்கை சீற்றங்களால் உருமாறி சாதாரண கடற்கரையாக மாறிவிட்டது (படம்). ஆனாலும் சுற்றுலாப் பயணிகள்  இக்கடற்கறைக்கு வந்து செல்கின்றனர்.

   கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் மீண்டும் சிறுமீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்திருந்தது அதனையொட்டி தொண்டியில் துறைமுகம் அமைக்க முறிசிலான்தோப்பு அருகே இஸ்லாம் அமைப்புக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தை அரசுக்குக் கொடுத்துள்ளனர்.  

    சேது சமுத்திரத் திடடம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  எனவே தொண்டியில் மீண்டும் துறைமுகம் அமையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.  இந்தத் துறைமுகம் அமைக்கப்படுமானால் இப்பகுதியில் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

  இதனையொட்டி சிறுதொழிற் கூடங்கள் உருவாகும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.  வர்த்தகம் பெருகும் நிலையில் வளரும் கடற்கரை நகரமாகும் சூழ்நிலை இருந்தது.

   சிவகங்கையில் கடந்த சில நாள்களுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சேது சமுத்திரத் திட்டத்தின் துணைத் திட்டமான மூக்கையூர் துறைமுகத் திட்டம் செயல்படுத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை.

    எனவே 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகக் கூறினார். இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தின் துணைத் திட்டமான தொண்டி துறைமுகத்துக்óகு 100 கோடி ருபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

   தற்போது சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொய்வு விழுந்த நிலையில் தொண்டி துறைமுகத்திற்கு எந்தவித உத்தரவும் அரசு பிறப்பிக்கவில்லை. பணிகளும் நடைபெறவில்லை.  எனவே இப்பகுதி மக்கள் தொண்டியில் மீண்டும் துறைமுகம் அமைக்க வலியுறுத்தி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai