Enable Javscript for better performance
மானூர் சுவாமிகள் குரு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    பழனி, அக். 20:   பழனியை அடுத்த மானூரில் வசித்தவர் ஸ்ரீலஸ்ரீ மானூர் சுவாமிகள். இவரது சித்துவேலைகளால் அப்பகுதி மக்களிடையே பெரியமகானாக வழிபடப்பட்டார். இவர் கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில் அருகில் உள்ள தோட்டத்தில் ஜீவசமாதி அடைந்து 65 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இவரது மகா குரு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணி முதல் ஜீவசமாதிக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் போன்ற நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலைகள், சந்தனத்தால் பீடம் அலங்கரிக்கப்பட்டது. ஏராளமான சாதுக்கள் பக்திப் பாடல்கள், சரணங்கள் பாடினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai