தேவகோட்டை, டிச. 11: தேவகோட்டை விவேகா கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரியில் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது.
உலக மனித உரிமைகள் தினமான வெள்ளிக்கிழமை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் செயலர் ஜெயராணி தலைமையில் மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மனிதர்களுக்கு உள்ள சமூக உரிமைகள் என்ன அவற்றை எப்படி பெறுவது என்பது குறித்து அவர் விளக்கிப் பேசினார்.