தேவகோட்டை, டிச. 11: தேவகோட்டை தேபிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியர் வில்சன் தலைமை வகித்தார். ஆசிரியர் குழந்தைச்சாமி வரவேற்றார்.
ராமநகர் புனித வளன் மெட்ரிக். பள்ளித் தாளாளரும் வளன் இல்ல இயக்குநருமான செபாஸ்டின் சிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.
ஆசிரியர் செபாஸ்டின்ராஜேந்திரன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவர்களுக்கு இனிப்புகளையும் பரிசுகளையும் வழங்கினார். இனிகோ இசைக்குழு வினரின் கிறிஸ்துமஸ் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அருட்தந்தையர்கள் அகஸ்டின், ஸ்தனிஸ்லாஸ், அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.