ஆம்புலன்ஸ் 108-ல் பணிபுரிய மருத்துவ உதவியாளர் ஓட்டுநர் பணிக்கு நேர்முகத் தேர்வு

ராமநாதபுரம், டிச. 18: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சிமன்றக் கூட்ட  அரங்கில், ஆம்புலன்ஸ் 108-ல் பணிபுரிய ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம், டிச. 18: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சிமன்றக் கூட்ட  அரங்கில், ஆம்புலன்ஸ் 108-ல் பணிபுரிய ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.

 ஆம்புலன்ஸ் 108 சேவை நிறுவனத்தின் மண்டல மேலாளர் எஸ்.ஜி.ஆர். லெட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மனிதவளப் பிரிவின்  நிர்வாகி அப்பாத்துரை,டாக்டர் முஹம்மது  ஹசீன்,கோட்ட மேலாளர் பால். ராபின்சன் ஆகியோர் நேர்முகத் தேர்வினை நடத்தினர். சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன.

 ஓட்டுநர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும்,கனரக வாகன ஓட்டுநர்  உரிமம் வைத்திருப்பதுடன், 5 ஆண்டுகள் அனுபவம் உடையவர்களும் வயது 38-க்குள் இருப்பவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

 அவசர மருத்துவ உதவியாளர் பணிக்கு உயிர் அறிவியல் பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவராகவும் வயது 20 முதல் 30-க்குள் இருப்பவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

 ஓட்டுநர் பணிக்கு 112 பேரும்,அவசர மருத்துவ உதவியாளர் பணிக்கு 124 பேருமாக மொத்தம் 236 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.

 நேர்முகத் தேர்வில் அவசர மருத்துவ உதவியாளர் பணிக்கு பெண்கள் 45 பேரும் கலந்து கொண்டனர்.  ஓட்டுநர் பணிக்கு சம்பளமாக ரூ.  6300-ம்,அவசர மருத்துவ உதவியாளர் பணிக்கு  மாதச் சம்பளமாக ரூ.  7500-ம் வழங்கப்படும் என மண்டல மேலாளர் எஸ்.ஜி.எஸ். லெட்சுமணன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com