ஒட்டன்சத்திரம், டிச. 18: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் தொகுதி தொப்பம்பட்டி வட்டாரத்தில், மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள துவரை செயல் விளக்கத் திடல்களையும், ராஜராஜன் 1000 நெல் சாகுபடி திடல்களையும், மத்திய திட்டத் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இணை இயக்குநர் கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில், ராஜராஜன் 1000 விதை நெல் சாகுபடி செய்துள்ள தாசப்பகவுண்டன்வலசு விவசாயி முத்துச்சாமியிடம், அவ்விதை நெல்லின் முறை குறித்தும்,அதன்மூலம் கடந்த ஆண்டு பெற்ற மகசூல் குறித்தும் கேட்டறிந்தனர்.
அப்போது, தொப்பம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) கணேசன், துணை அலுவலர் துரைசாமி, உதவி வேளாண் அலுவலர்கள் செல்லச்சாமி, ரவீந்திரன், முரளிதரன், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.