கமுதி, டிச. 18: கமுதி அருகே முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் இருவர் காயம் அடைந்தனர். 9 பேர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அபிராமம் காவல் நிலைய சரகம் வி.வலசையைச் சேர்ந்தவர் சேதுராஜா (52). இவரது மகனை சில மாதங்களுக்கு முன்பு, செவணு மகன் முனியாண்டி தரப்பினர் திண்டுக்கல்லுக்கு கடத்திச் சென்று கொலை செய்தார்களாம்.
இந்த முன் விரோதத்தில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். மோதலில் காயம் அடைந்த சேதுராஜா, கமுதி அரசு மருக்குவமனையிலும், இருளாண்டி மனைவி பாப்பு (30), ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
இருதரப்பு புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு தரப்பில் செவணு மகன் முனியாண்டி உள்பட 4 பேர் மீதும், மற்றொரு தரப்பில் சேதுராஜா மகன் துரைவேல் உள்பட 5 பேர் மீதும் 2 வழக்குகள் பதிவு செய்தனர்.