செம்பொன்குடி ஊராட்சி மக்கள் நலப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்,டிச. 26:       முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்பொன்குடி ஊராட்சியில் மக்கள் நலப்பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் தகுதியுடையவர்கள் அப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆ
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம்,டிச. 26:       முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்பொன்குடி ஊராட்சியில் மக்கள் நலப்பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் தகுதியுடையவர்கள் அப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இப்தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பு:

செம்பொன்குடி மக்கள் நலப் பணியாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சியை;க் சேர்ந்தவராகவும் அங்கு வசிப்பவராகவும், 10-ம் வகுப்புப்க் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்கு உள்பட்டவராகவும் இருப்பது அவசியம்.

  விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜனவரி 6-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பத்தினை முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் திட்டப் பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com