ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 26: ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில், 2010-ம் ஆண்டின் நிறைவு ஞாயிறு ஸ்தோத்திர ஆராதனையை சபைகுரு அருள்திரு கே.முத்துச்செல்வன் தலைமையேற்று ஜெபித்து ஆரம்பித்து வைத்தார்.
சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் பாடகர் குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.எட்வின் கனகராஜ் தலைமையில் பாடகர் குழுவினர் பாடல்களைப் பாடினர். ஜோனத் இசைக் கருவிகளை மீட்டார்.
அருள்திரு அருள்தாஸ் ஞானமுத்து சிறப்பு ஸ்தோத்திர ஆராதனையில் தேவசெய்தியளித்தார்.
சபை உபதேசியார் ஆர்.ஏசுதாஸ் முத்தையா உள்ளிட்ட ஏராளமான சபை மக்கள் ஆராதனையில் கலந்து கொண்டனர்.
மாலையில் கிறிஸ்துமஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பின்னர், நடைபெற்ற கிறிஸ்துமஸ் மரவிழாவில், திருச்சபையின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கிறிஸ்துமஸ் கால சிறப்பு ஆராதனைகளுக்கான ஏற்பாடுகளை சபையின் செயலாளர் ஜி. ராக்லாண்டு நிக்கலஸ் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.