முதுகுளத்தூரில் காணாமல் போன இளம்பெண் மீட்பு
முதுகுளத்தூர், டிச. 26: முதுகுளத்தூரில் காணமல்போன இளம்பெண்ணை போலீஸôர் மீட்டு நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர். ஆனால் அன்த இளம்பெண்
பெற்றோருடன் செல்ல மறுத்ததால், மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
வடக்கூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் பூ வியாபாரி கருப்பசாமி. இவரது ஒரே மகள் முத்து லட்சுமி (17) அதிகாலையில் கோவிலுக்கு சென்றவர் வீட்டுக்குத் திரும்பவில்லையாம்.
இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கருப்பசாமி தந்த புகாரில் இன்ஸ்பெக்டர் பிரதாபன், சப்-இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் 2 வழக்குகள் பதிவு செய்து முத்து லட்சுமியைத் தேடி கண்டு பிடித்தனர்.
முதுகதுளத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட முத்துலட்சுமி, தனது பெற்றோரிடம் செல்ல மறுத்து விட்டார்.
இதையடுத்து குற்றவியல் நடுவர் சரவணகுமார் உத்தரவில், மகளிர் காப்பகத்தில் முத்து லட்சுமி சேர்க்கப்பட்டார்.