Enable Javscript for better performance
போடி மெட்டு மலைச்சாலையில் மண் சரிவு: போக்குவரத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    போடி மெட்டு மலைச்சாலையில் மண் சரிவு: போக்குவரத்து நிறுத்தம்

    Published on : 20th September 2012 03:38 PM  |   அ+அ அ-   |    |  

    போடி, நவ. 22: தேனி மாவட்டம், போடி மெட்டு மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து 6 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

    போடி மெட்டு மலைச்சாலையில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்தச்  சாலையில் கேரளம் செல்லும் பயணிகள், சுற்றுலாப் பயணிகள், தோட்டத் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான போடி மெட்டு மலைச்சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் 12-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு சாலையை மூடியது.

    இதனால் நள்ளிரவு முதல் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அரசு பஸ்கள், சுற்றுலா பஸ்கள், சரக்கு லாரிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.

    திங்கள்கிழமை காலையில் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகளும் செல்ல முடியவில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் வீடு திரும்பினர்.

    மண் சரிவு காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து போடி குரங்கனி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் மற்றும் போலீஸôர் அங்கு சென்று போக்குவரத்தை சீர்படுத்தினர். தேனி கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் குமணன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு வந்து சாலையை சீரமைக்கும் பணியைத் தொடங்கினர்.

    மண் சரிவு காரணமாக 6 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போடி மெட்டு மலைச்சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண், பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளன

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai