சிவகங்கை, ஜன. 1: சிவகங்கை ராணி ரெங்க நாச்சியார் நினைவு பஸ் நிலையத்தில் அரசு, தனியார் பஸ் ஊழியர்களிடையே சனிக்கிழமை கைகலப்பு ஏற்பட்டது.
இது குறித்து கூறப்படுவதாவது:
சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் அரசு பஸ், காலை 8.05 மணிக்கு சிவகங்கையிலிருந்து புறப்பட்டது. அப்போது ஒரு தாயும், மகளும் அதில் ஏறுவதற்காக கையைக் காட்டியதால், பஸ்ûஸ நிறுத்தினாராம் டிரைவர் முருகன்.
புறப்பட்ட பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதைக் கண்ட தனியார் பஸ் டிரைவர் மோகன், வேகமாக பஸ்ûஸ ஓட்டிச் சென்று அரசு பஸ்ûஸ மறித்து நிறுத்தினார். பின்னர் டிரைவர் மோகன், அதே பஸ்ஸில் பணி முடித்து இறங்கிய டிரைவர் கைலாசம், கண்டக்டர் முருகன் ஆகியோர், அரசு பஸ் டிரைவரை வெளியே இழுத்து, தகாத வார்த்தைகளைக் கூறி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சபரிமலைக்குச் செல்ல மாலை போட்டிருந்த முருகனின் மாலை அறுந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த எஞ்சிய அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கள் பஸ்களை எடுக்க மறுத்து ஆங்காங்கே பஸ்களை நிறுத்திவிட்டனர். இதனால் காலை 8.05 முதல் 8.35 மணி வரை பஸ்கள் வெளியே செல்ல முடியாமலும், உள்ளே வர முடியாமலும் தடை ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை நகர போலீஸôர், இரு பஸ்களையும் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்று இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.