மதுரை, ஜன 1: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் முலம் விண்ணப்பிக்க ஸ்திரி தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனச் செயலர் எம்.புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு மதுரை கோரிப்பாளையம் சின்னக்கண்மாய் தெருவில் உள்ள சூர்யா பயிற்சி நிறுவனமும் ஸ்திரி தொண்டு நிறுவனமும் இணைந்து ஆன்லைன் மூலம் இலவசமாக விண்ணப்பிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். 81242 97424 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.