கமுதி, ஜன. 1:கமுதி அருகே உள்ள அபிராமம் பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்டதாக 100 பேர் மீது போலீஸôர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், மண்டலமாணிக்கத்துக்கு வந்திருந்தபோது அவரது ஆதரவாளர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் அபிராமம் அருகே உள்ள பொட்டகுளம், மணிப்புரம், பச்சேரி ஆகிய கிராமங்களில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் பச்சேரியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, பாண்டி, நாகேஸ்வரன், அன்புராஜ், பொட்டகுளத்தைச் சேர்ந்த முத்துராமன், சக்திவேல், வேல்முருகன் உள்பட 100 பேர் மீது இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.