தேவகோட்டை, ஜன. 1: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வெள்ளையன் ஊரணியில் அமைந்துள்ள ஸ்ரீதென்கலை ரெங்கநாதப்பெருமாள் ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இங்கு பெருமாளுக்கு திருப்பதி வெங்கடாசலபதிபெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலையில் திரண்டிருந்த மக்கள் விசேஷ அபிஷேகத்தில் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குட்டையன் செட்டியார் செய்திருந்தார்.