பெற்றோர்}ஆசிரியர் கழகக் கூட்டம்

விருதுநகர், ஜன. 1: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   கூட்டத்திற்கு கல்லூரிச் செயலாளர் எஸ்.ஏ.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தார். கல்லூரி
Published on
Updated on
1 min read

விருதுநகர், ஜன. 1: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்திற்கு கல்லூரிச் செயலாளர் எஸ்.ஏ.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தார். கல்லூரி துணைத் தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். முதல்வர் மாணிக்கவேல் வரவேற்றார்.

  இதில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் தன்னாட்சி பெற எடுத்து வரும் முயற்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

கல்லூரி சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஏ.சண்முகசுந்தரம், கணினி துறைத் தலைவர் டி.கதிர்வளக்குமார், இயற்பியல் துறை பேராசிரியர் எஸ்.பிரகாஷ் ஆகியோர் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதன் மூலம் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் என விளக்கமாகப் பேசினர்.

  கூட்டத்தை ஆண்டுக்கு இருமுறை நடத்துவது, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதற்குப் பாராட்டு தெரிவித்தும், தன்னாட்சியை வரவேற்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  பெற்றோர்-ஆசிரியர் கழக அமைப்பாளர் ஜி.செந்தில் நன்றி கூறினார். இதில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கழகச் செயலாளர் ஆர்.வைரமுத்துவேல் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com