சிங்கம்புணரி, ஜன. 1: சிங்கம்புணரியில் வீட்டுக் கதவை உடைத்து 8 பவுன் நகை மற்றும் பணத்தை திருடர்கள் திருடிச் சென்றனர்.
சிங்கம்புணரி என்பீல்டு காலனியில் வசித்து வருபவர் சேகர் (45). கோழிக் கம்பெனியில் வேலை பார்க்கும் இவர் குடும்பத்துடன் ஊருக்குச் சென்றிருந்த போது பூட்டிருந்த வீட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ. 3000-ஐ மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல, சிங்கம்புணரி நியூ காலனியில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஜெயபால் வீட்டை உடைத்தும், அவரது வீடு அருகே உள்ள செல்வம் மற்றும் அன்னபூரணி ஆகியோரின் வீட்டை உடைத்தும் மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை நியூகாலனியில் பெண்ணை தாக்கி 10 பவுன் தாலிச் சங்கிலியை திருடர்கள் பறித்துச் சென்றனர்.