ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 8: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட 11 குறுவள மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான, கலை மற்றும் கைவினைப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 427 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தொடக்கப் பள்ளிகளில் முதல் 4 வகுப்புகளுக்கு செயல்வழிக் கற்றல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கற்றல் முறையை வலுவூட்டும் வகையில் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு சார்ட் அட்டை மற்றும் செய்தித்தாளில், யானை, முதலை, பாம்பு, தவளை, வெüவால், கரடி முகம், நாய் முகம், பறவை, பூக்கள், போட்டோ பிரேம் உள்ளிட்டவை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கணபதி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயராஜ் கந்தசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.