திண்டுக்கல், ஜன. 8: திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என, தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநர் ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு, மாவட்ட மக்களின் சார்பில், திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதே போல், திண்டுக்கல் மாவட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து மருத்துவக் கல்லூரியை விரைந்து முடிக்கவேண்டும் எனக் கோரி, தமிழக முதல்வர், வருவாய்த் துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.வி.ஆர்.ஏ. சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.