தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்கம்

தேனி, ஜன. 8:தேனியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடத்தப்படும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தேனி, ஜன. 8:தேனியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடத்தப்படும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தொடங்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாதவி, தேனி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எல்.மூக்கையா, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் மு.வீரராகவன், தேனி நகர்மன்றத் துணைத் தலைவர் லங்கேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்களாமேடு கள்ளர் கல்விக் கழக மைதானத்தில் ஜனவரி 16-ம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெற உள்ளது.

 இக் கண்காட்சியில் அரசு வளர்ச்சிப் பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகளை விளக்கி பல்வேறு துறைகள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்ச்செல்வராஜன் வரவேற்றார்.கண்காட்சி மைதானத்தில் கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.