சாத்தூர், ஜன. 22: சாத்தூர் மாயூர்நாதபுரத்தில் நேரு இளைஞர் கேந்திராவின் மயில் இளைஞர் சங்கம் சார்பில் இளையோர் வார விழா கொண்டாடப்பட்டது. நேரு யுவகேந்திராவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் தலைமை வகித்தார். செயலாளர் அழகுமணி வரவேற்றார். கவுன்சிலர் ஜெயலட்சுமி, ஊராட்சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எத்திராஜ சிம்மன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி கல்வி, கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.