வத்தலகுண்டு, ஜன. 22: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் சில மாலை நேர அசைவ உணவகங்களில் ஆம்லெட்டில் வெங்காயத்துக்குப் பதிலாக முட்டைகோஸ் பயன்படுத்தப்படுகிறது.
அன்றாடம் பயன்படுத்தப்படும் சமையல் காய்கறிகளில் முக்கிய இடம் வகிக்கும் வெங்காயம், சமீபகாலமாக கடுமையாக விலை உயர்ந்திருப்பதால், சில மாலை நேர அசைவ உணவகங்களில் வெங்காயம் பயன்படுத்தாமல் பிளைன் ஆம்லெட் போடப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் திருப்தி அடையாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், ஆம்லெட்டில் வெங்காயத்துக்குப் பதிலாக முட்டைகோûஸ சில கடைகளில் பயன்படுத்துகின்றனர். பிளைன் ஆம்லெட்டுக்கு இது பரவாயில்லைதான் என வாடிக்கையாளர்கள் கூறுவதாக, உணவக உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.