விருதுநகர், ஜூலை 3: அருப்புக்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் 16 பவுன் நகை திருடிச் சென்ற மர்ம மனிதர்களைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் வக்கீல் சவுண்டையா தெருவில் வசிப்பவர் பரமராஜ் (66). இவர் உறவினரின் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் விருதுநகர் சென்றார். பின்னர் அருப்புக்கோட்டை திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்க்கையில் தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல்கள் உள்பட 16 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அருப்புக்கோட்டை நகர போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.