திண்டுக்கல், ஜூலை 3: காந்திஜி நற்பணி இயக்க திண்டுக்கல் கிளைக் கூட்டம் சனிக்கிழமை இயக்கத் தலைவர் என். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் காந்திஜி ஆய்வுக் களஞ்சிய நூல் வெளியிடுவது, காந்திஜி நற்பணி இயக்கத்தின் வெள்ளி விழா மலர் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
காந்திஜியின் ஆய்வுக் களஞ்சிய நூலுக்கு காந்தியக் கொள்கைகளாகிய நாட்டு விடுதலை, அகிம்சை, மதுவிலக்கு, தீண்டாமை, சமய ஒற்றுமை, பெண்ணடிமை, பெண்ணியம் (கலப்புத் திருமணம், காதல் திருமணம், விதவை மறுமணம்) இயற்கை வைத்தியம், காந்தியப் பொருளாதாரம், சமயக் கோட்பாடுகள், காந்தியின் தலைமையில் விடுதலைக்காகப் போராடிய தலைவர் குறித்த கட்டுரைகள் எழுதி வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் அனுப்பலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்டுரைகள் எழுதி அனுப்புவது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் என்.பாஸ்கரன், தலைவர், காந்திஜி நற்பணி இயக்கம், பெஸ்வா இயற்கை மருத்துவமனை வளாகம், ஆர்.எம்.காலனி முதல் கிராஸ், திண்டுக்கல் (செல் - 924553 81779) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.